கால பைரவர் இக்கட்டான நேரத்தில் தன்னை நினைத்தாலே ஆபத்துகளிலிருந்து உடனே செயல்பட்டு பக்தர்களைக் காப்பார். அவர் தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எம பயத்திலிருந்து பாதுகாத்து, நீண்ட ஆயுள், பண வரவு மற்றும் தடைகளை நீக்கி, அஷ்ட லட்சுமிகளின் அருளைப் பெற்றுத் தருகிறார். இந்த கடவுளே காலபைரவராக உலகை காக்கின்றார். பைரவர் பக்தர்களை எப்படி பாதுகாக்கிறார் அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் கால பைரவர். இத்தகைய பைரவர் நம்மை பாதுகாக்கும் முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்
பைரவர் பக்தர்களை எப்படி பாதுகாக்கிறார்
ஆபத்து மற்றும் எம பயம் நீக்குதல்: ஆபத்தான நேரங்களில், மனதார பைரவரை நினைத்தாலே, அவர் உடனே செயல்பட்டு ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
எதிர்மறை ஆற்றல்களை அழித்தல்: பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள், மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் பயத்தினால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கிப் நம்மை பாதுகாக்கிறார்.
பகைவர்களின் தொல்லை: எதிரிகளின் தொல்லைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்து, அச்சமின்மையைத் தருகிறார்.
நிதி மேலாண்மை மற்றும் வறுமை நீக்கம்:பைரவர் வழிபாட்டின் மூலம், வறுமை நீங்கி செல்வச் செழிப்பு, லட்சுமி கடாட்சம் மற்றும் பண வரவு உண்டாகும்.
காலத்தை வெல்லுதல்: காலத்தின் அதிபதியான பைரவர், நம் ஆயுளைக் காத்து, அகால மரணத்தைத் தடுப்பார்.
தடைகளை நீக்குதல்: வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கி, சுப காரியங்கள் நிறைவேற அருளுகிறார்.
பைரவரின் வழிபாட்டு முறைகள்
அனைத்து நாள்களும் பைரவரின் பிரார்தனைகளுக்கான நாள்களே அதிலும் கீழ்க்காணும் நாள்களில் வழிபாடு செய்வது ஆகச் சிறந்தது.
தேய்பிறை அஷ்டமி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.
கார்த்திகை மாத அஷ்டமி: கார்த்திகை தேய்பிறை அஷ்டமி, “கால பைரவாஷ்டமி” என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்த நன்னாளில் பைரவரை வழிபடுவது சிறந்தது
வழிபாடு: 48 நாட்கள் தொடர்ந்து அல்லது 6 வாரங்கள் தேய்பிறை அஷ்டமியில், 108 முறை “ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ“ என்ற மந்திரத்தைச் ஜெபித்து, பைரவரை வழிபடலாம்.
நைவேத்தியம்: பைரவருக்கு அன்னம் மற்றும் வடை மாலை சாற்றி வழிபடுவது, நினைத்த காரியங்களை வெற்றி பெற செய்யும்.
பைரவரை முழு நம்பிக்கையுடன் வணங்கினால், அவர் நம்மைப் பயங்கரமான எதிரிகள் தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டிகளிடமிருந்தும், கோபம் , பொறாமை போன்ற தீய குணங்களிலிருந்தும் காப்பார். ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வணங்குவதன் மூலம் அனைத்து விதமான சுபகாரியங்களும் கைகூடும் செல்வச்செழிப்பு உண்டாகும் . கால பைரவரை வணங்குவதால் உடல் மற்றும் மனநலம் ஆரோக்கியம் பெரும்.
“தென்னக காசி என்றழைக்கப்படும் நமது பைரவர் கோவிலில் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ,காலபைரவர் மற்றும் 62 பைரவர்களின் தரிசனம் பெற்று வாழ்வில் வளத்தை பெருக்குங்கள்”
