பைரவரின் உருவத்திற்கு பின்னான புராணக் கதைகள்: அவரது தெய்வீக நிகழ்வுகளை உருவாக்கிய கதைகள்

பைரவரின் உருவத்திற்கு பின்னான புராணக் கதைகள் பற்றி அறியும்போது, இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை என்று கூறுமளவு மிகவும் பெருமை பெற்றவர் கால பைரவர். இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் மீது அமர்ந்த படி காட்சியளிப்பார். இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார் என்பது ஐதீகம். இங்கு ஸ்கந்த புராணத்தில் கால பைரவர் தோன்றிய கதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பைரவரின் உருவம் மற்றும் புராணக் கதைகள்

தேவலோகத்தில் உள்ள தெய்வங்கள் ஒரு முறை பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது  தெய்வங்களில் உத்தமமானவர் யார் எனக் விவாதம் ஆரம்பிக்க, பிரம்மா சிறிதும் தாமதிக்காமல், இதில் என்ன சந்தேகம் நான் தான் எனக் கூறினார். இதைக் கேட்ட விஷ்ணு பகவான் கோபம் கொண்டார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைப்பெற்றது.

விவாதம் முடிவது போன்று இல்லை. எனவே தெய்வங்கள் வேத அதிபதிகளை அழைத்து, அவர்களின் கருத்தைக் கேட்டனர். வேத அதிபதிகளோ சற்றும் யோசிக்காமல், சிவபெருமான் தான் அனைவரையும் விட உத்தமமானவர் என்று கூறினர். அதைக் கேட்ட பிரம்மா மிகுந்த ஆத்திரம் கொண்டு, சிவபெருமானைக் குறித்து கண்ட படி பேசினார்.

முதல் தோற்றம்

பிரம்மா ஆத்திரத்தில், “யார் அந்த சிவன்? உடல் முழுவதும் தூசி படிந்தவாறு சாம்பல் பூசிக்கெண்டு, கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு, நீண்ட சடைமுடியுடன், ஒரு மாட்டின் மீது அமர்ந்து சுற்றுகின்றவரா, என்னை விட உத்தமமானவர்? என்று கூறி கொண்டிருக்கையில், கைலாயத்தில் உள்ள சிவனின் காதுகளில் அனைத்தும் விழ, சிவன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார். பிரம்மாவின் கூற்றைக் கேட்டு, விஷ்ணுவும், பிற கடவுள்களும் பிரமித்து நிற்கையில், மிகுந்த சப்தத்துடன் சிவன் ஒளி வெள்ளமாக தோன்ற, அந்த ஒளி வெள்ளத்தில் ஒரு மனிதன் தோன்றினான்.

அம்மனிதன் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைத் துண்டித்து தன் கைகளில் ஏந்தினான். பின் சிவன் தன் உண்மையான உருவத்திற்கு மாறி, பிரம்மாவே உன்னுடைய எந்த தலை என்னை நிந்தித்து பாவத்தைப் பெற்றதோ, அந்த தலையை பைரவர் துண்டித்துவிட்டார் எனக் கூற, அப்போது தான் அனைவருக்கும் வந்திருப்பது சிவன் என்றே புரிய வந்தது.

பைரவருக்கும் காசிக்கும் உள்ள தொடர்பு

சிவனே தன் மற்றொரு அவதாரமான கால பைரவரைத் தோற்றுவித்துள்ளார். பின் சிவன் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட கால பைரவனிடம் “நீ பிரம்மாவின் தலையைத் துண்டித்ததினால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க, பிரம்மாவின் தலையை ஏந்திக் கொண்டு மூவுலகையும் சுற்றி பிட்சை பெற்றுக் கொண்டவாறு காசியை அடையுமாறு ” கூறினார்.

இதன் மூலம் என்ன தெளிவாகிறதென்றால் பைரவர் தீமையை அளிக்கும் ஒரு அவதாரமாக திகழ்கிறார் .

இந்த நிகழ்ச்சியினால் தான் காசிக்கு சென்றால் மோட்சம் கிடைக்கும் என்ற பழமொழி வந்தது. இதன் காரணமாகத் தான் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்க காசியில் உள்ள கால பைரவரை அனைவரும் வணங்குகின்றனர்.

“காசியின் மறு வடிவமாக திகழும் நமது தென்னக காசி திருக்கோவிலுக்கு மக்கள் அனைவரும் வருகை புரிந்து காலபைரவரை தரிசித்து உங்களின் வாழ்கை காலங்களில் உள்ள தீமையை அகற்றி நன்மையை பெருக்குங்கள்”

Previous Post
Next Post

123 Fifth Avenue, NY 10160, New York, USA | Phone: 800-123-456 | Email: mountainadventure@info.com

© 2023 Created with Royal Elementor Addons

Logo

Welcome to the world's largest Bhairava temple, a sacred haven where devotion meets grandeur.

95857 66669, 98425 99006
bairavafoundation@gmail.com
Erode - Kangayam Main road, Raattaisutripalayam, Avalpoondhurai - ERODE, Tamilnadu, INDIA - 638115
Work Hours
Open daily 8am - 8pm

We offer various sacred rituals including Abhishekam and Homams to help devotees connect with Lord Bhairava.

Reach Our Temple
  • Erode Bus Stand - 14 kms
    From Erode Bus stand,
    Bus No: 10, 14, 22, 46
  • Erode Railway Station - 12 kms
  • Salem Airport - 60 kms
    Coimbatore Airport - 100 kms
    Tiruchirappalli - 150kms
Temple Location

Bhairava Temple

Bhairava Peedam


© 2026 Bhairava Peedam. Designed with Divine Devotion.