பைரவர் வழிபாட்டு முறைகள் தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ,பௌர்ணமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் தேங்காய் விளக்கேற்றி, பைரவருக்கான மந்திரங்களை 108 முறை உச்சரிப்பது சிறந்தது.பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவளித்து வழிபடுவதன் மூலம், தடைகள் நீங்கி, செல்வம் மற்றும் பாதுகாப்புடன் கூடிய ஆசீர்வாதங்களைப் பெறலாம். இந்த பதிவில் பைரவருக்கான வழிபாட்டு முறைகளைப் பற்றி தெளிவாக காண்போம்.
பைரவரின் வழிபாட்டு முறைகள்
- தேய்பிறை அஷ்டமி : தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த திதியாகும். அன்றைய தினம் நம்முடைய வேண்டுதல்களை மனதார பிரார்த்தித்து நமது கைகளால் பாலாபிஷேகம் செய்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
- மஹா பால் அபிஷேகம்: ஒவ்வொரு மார்ச் மாத தேய்பிறை அஷ்டமியிலும், 39 அடி உயர மகா காலபைரவருக்கு மஹா பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
- ராகு கால பூஜை: தினமும் ராகுகாலம் என்பது உண்டு,அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் பைரவருக்கு விசேஷமான நாளாகவும் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது .ஆகவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணிக்கு ராகுகால சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்து கொண்டால் கல்வி,தொழில் மற்றும் திருமண தடைகள் அகலும்.
- ஸ்வர்ண அபிஷேக பூஜை: ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் மாலை 4.30 மணியளவில் சிறப்பு யாகம் நடைபெற்று, அதன்பிறகு ஸ்வர்ண லிங்கத்திற்கு 108 நாணய அபிஷேகம் நடைபெறும் .இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு அபிஷேகம் செய்த நாணயங்களை வீட்டிலோ அல்லது தொழில் செய்து வரும் இடத்திலோ வைத்து வழிபட்டு வர ,லட்சுமி கடாக்ஷம் பெருகும் ,செல்வம் செழிக்கும் ,கடன் தீரும்.
- அமாவாசை பூஜை : ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் மாலை 4.30 மணியளவில் அமாவாசை சிறப்பு யாகம் நடைபெற்று, அதன் பின்னர் ஸ்வர்ணலிங்க நெய் அபிஷேகம் நடைபெறும்.இந்த நெய் அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேக நெய்யை பிரசாதமாக எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்படும் , தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்
- வளர்பிறை அஷ்டமி சப்தஆரத்தி : ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி திதியிலும் மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சப்தஆரத்தி வழிபாடு நடைபெறும் .இந்த சப்த ஆரத்தி என்பது காசியின் 750 ஆண்டுகால பாரம்பரிய வழிமுறையாகும் .இத்தகைய சப்த ஆரதியில் பக்தர்கள் கலந்து கொண்டு தீப ஆராதனையை தரிசித்தால் அவர்களது வாழ்வில் இருள் அகன்று வாழ்வே பிரகாசமாகும் .
- பைரவர் சன்னதியில் தேங்காய் தீபமேற்றி வழிபட்டால் அனைத்து விதமான தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
- பைரவருக்கு சிவப்பு நிற மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளை அர்ப்பணித்து, நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யலாம்.
இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் தைரியம், பாதுகாப்பு மற்றும் வளமான வாழ்க்கையை பைரவரின் அருளால் பெற முடியும்.
“தென்னக காசி பைரவர் திருக்கோவிலில் பைரவருக்கான வழிபாட்டை மனதார செய்து உங்கள் வாழ்வில் மன அமைதியையும் வளத்தையும் பெருக்குங்கள்”
